உள்ளூர் செய்திகள்

 தடை செய்யப்பட்ட இடத்தில் சுற்றுலா பயணிகள் அமர்த்திருப்பதை படத்தில் காணலாம்.

அமராவதி அணையில் அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகள்

Published On 2023-07-01 10:58 GMT   |   Update On 2023-07-01 10:58 GMT
  • அணையில் அத்துமீறி, சுற்றுலாப்பயணிகள் குளிப்பது அதிகரித்துள்ளது.
  • அணையின் முகப்பிலுள்ள பாலத்தில் தடை செய்யப்பட்ட இடத்தில், மீன்பிடிக்கின்றனர்

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் அத்துமீறி, சுற்றுலாப்பயணிகள் குளிப்பது அதிகரித்துள்ளது.

நீர் தேக்கத்தில் குளிப்பதற்கு, பொதுப்பணித்துறையினர் தடைவிதித்து, எச்சரிக்கை பலகையும் வைத்துள்ளனர். அணையில் முதலைகள் நடமாட்டமும் உள்ளது. இந்த விபரீதம் தெரியாமல், சுற்றுலாப்பயணிகள் அணையில் அத்துமீறுகின்றனர். படகு சவாரிக்காக அமைக்கப்பட்ட படித்துறையை ஒட்டி, ஆழமான பகுதியில் குளித்து வருகின்றனர். அதே போல் அணையின் முகப்பிலுள்ள பாலத்தில் தடை செய்யப்பட்ட இடத்தில், மீன்பிடிக்கின்றனர்.எச்சரிக்கை பலகை அருகிலேயே அத்துமீறி இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன.

பொதுப்பணித்துறையினர் கண்காணித்து, அத்துமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உயிரிழப்புகளை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

Similar News