உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

மரக்கன்றுகள் நட்டு வளர்க்க பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு

Published On 2023-06-22 10:24 GMT   |   Update On 2023-06-22 10:24 GMT
  • வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், 8 ஆண்டுகளில் 15.85 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறோம்.
  • மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர் 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

திருப்பூர்:

வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்சாலை வளாகங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க முன்வரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட இயக்குனர் சிவராம் கூறியதாவது:-

வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், 8 ஆண்டுகளில் 15.85 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறோம். இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் இலக்குடன் ஒன்பதாவது திட்டம் துவங்கியுள்ளது.ஒன்பதாம் ஆண்டு திட்டத்தில் வழக்கம் போல் விவசாய நிலம், தொழிற்சாலை நிலம், கோவில் நிலங்களில் மரக்கன்றுகள் நடப்படும். அத்துடன் பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலை வளாகத்திலும் மரக்கன்று நட்டு வளர்க்க திட்டமிட்டுள்ளோம்.

தங்கள் வளாகத்தில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்பும் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்சாலைகள், வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவை அணுகலாம். பாரம்பரியமாக வளர்க்கப்படும், அரியவகை நாட்டு மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வழிகாட்டுதல் வழங்கப்படும். மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர் 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News