உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மோதல் சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-10-07 11:59 GMT   |   Update On 2022-10-07 11:59 GMT
  • கணபதிபாளையம் பகுதியில் தொடர் மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
  • மாவட்ட எஸ்.பி., சசாங் சாய் நேரில் வந்து ஆய்வு செய்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கரைபுதுார், கணபதிபாளையம் ஊராட்சிகளில் விசைத்தறி, விவசாயம், சாய ஆலைகள், பனியன் நிறுவனங்கள் நிறைந்துள்ளன இப்பகுதியில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சமீப நாட்களாக, கணபதிபாளையம் பகுதியில் தொடர் மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகனங்கள் இடையே வழி விடுவதில் ஏற்பட்ட தகராறு அடிதடியாக மாறியது. இதையடுத்து, சாலை மறியல், கைகலப்பு என இரு தரப்பினர் இடையே பெரும் பிரச்னை ஏற்பட்டது. மாவட்ட எஸ்.பி., சசாங் சாய் நேரில் வந்து ஆய்வு செய்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதேபோல், கடந்த 2 நாட்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த சிலர், சினிமா காட்சிகளில் வருவதுபோல், அரிவாள், பட்டா கத்தியுடன் வீதியில் உலா வந்தனர். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தொழிலாளர்கள் நிறைந்த கரைப்புதுார், கணபதிபாளையம் பகுதிகளில் போதை ப்பொருள் விற்பனையும் அதிகரித்துள்ளதாகவும், திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. இச்சூழலில், தொடர்ந்து நடந்து வரும் மோதல் சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.எனவே போலீசார் கடும் நடவடிக்கை குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தந்தால் மட்டுமே குற்ற சம்பவங்கள் குறையும். ஏனோ போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்கி வருகின்றனர்.இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News