உள்ளூர் செய்திகள்

பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்.

திருப்பூர் பத்மாவதிபுரம் அரசு பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரி பெற்றோர்கள் பள்ளியில் முற்றுகை

Published On 2022-06-29 11:24 GMT   |   Update On 2022-06-29 11:24 GMT
  • பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவ மாணவிகளின் கல்வி தரம் கேள்விக்குறியாக உள்ளதாக கூறி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டுனர்
  • பள்ளி வளாகத்தின் சுகாதாரமற்ற முறையில் சாக்கடை நீர் ஓடுவதால் மாணவ மாணவியருக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது

திருப்பூர் :

திருப்பூர் காந்திநகர் பத்மாவதிபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 900 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவ மாணவிகளின் கல்வி தரம் கேள்விக்குறியாக உள்ளதாக கூறி இன்று காலை 100க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் கூறுகையில் பள்ளியில் ஆசிரியர் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. மேலும், பள்ளியில் கழிப்பிடம் மற்றும் சுகாதார வசதி மிக மோசமாக உள்ளதால் மாணவர்களும் மாணவிகளும் கழிப்பறை இல்லாமல் பள்ளிக்கு வெளியே ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி வளாகத்தின் சுகாதாரமற்ற முறையில் சாக்கடை நீர் ஓடுவதால் மாணவ மாணவியருக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவர்களின் கல்வித் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கூறினர்.

தகவல் கிடைத்ததும் அனுப்பர்பாளையம் போலீசார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை பெற்றோர்களிடம் சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக கூறி உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததில் பேரில் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News