உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

முழுவீச்சில் நடைபெறும் பல்லடம்-காரணம்பேட்டை 4வழிச்சாலை பணி

Published On 2022-07-13 06:29 GMT   |   Update On 2022-07-13 06:29 GMT
  • வாகனப் பெருக்கம் காரணமாக இந்த வழித்தடத்தில் அதிகப்படியான விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
  • ரோடு விரிவாக்க பணி மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருப்பூர் :

பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு பிரதான வழித்தடமாக உள்ளது.வாகனப் பெருக்கம் காரணமாக இந்த வழித்தடத்தில் அதிகப்படியான விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.ரோடு விரிவாக்க பணி மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து பல்லடம் காரணம்பேட்டை வரை உள்ள 10 கி.மீ., தூரம் நான்கு வழிச்சாலையாக ரோடு விரிவாக்க பணி மேற்கொள்ள ஒப்புதல் கிடைத்தது.பல்லடம் அண்ணா நகரில் துவங்கி காரணம்பேட்டை வரை 10 மீட்டர் அகலம் உள்ள ரோடு18.6 மீட்டர் அகலமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

ஏற்கனவே மைய தடுப்புகள் உள்ள இடங்களை தவிர்த்து 10 கி.மீ., தூரமும் தேவையான இடங்களில் இடைவெளியுடன் மைய தடுப்புகளும் அமைக்கப்பட உள்ளன. 30 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள இப்பணிக்கு டெண்டர் ஒப்பந்தமும் நிறைவடைந்துள்ள சூழலில் விரிவாக்க பணிகள் துவங்கியுள்ளன.இதற்கான அளவீடு பணிகள் முடிந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன.

விரிவாக்கம் குறித்து அறிவிப்பு வெளியான இரண்டே வாரத்தில் துரித கதியில் பணிகள் நடந்து வருவது வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சாலை விரிவாக்கப்பட்டால், வாகனங்கள் ஊர்ந்து செல்ல ேவண்டிய அவசியம் இருக்காது. விபத்துகளும் குறையும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News