உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

null

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி - 17-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-10-15 07:52 GMT   |   Update On 2022-10-15 07:52 GMT
  • போட்டி துவங்கும் நேரத்துக்கு (காலை 7 மணி) முன்பாக பள்ளிக்கு வர வேண்டும் என்றார்.
  • அனைத்து பிரிவினருக்கான தடகள போட்டி வரும் 27, 28ந் தேதி 2 நாட்கள் நடக்கிறது.

திருப்பூர்:

நடப்பு கல்வியாண்டுக்கான குறுமைய போட்டிகள் ஆகஸ்டு - செப்டம்பர் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி அணிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி வரும் 17 ந் தேதி துவங்குகிறது.

அன்றைய தினம் அனைத்து பிரிவினருக்கான எறிபந்து, டென்னிகாய்ட், பீச் வாலிபால் போட்டி நடக்கிறது. வரும் 18-ந்தேதி முதல், 21-ந் தேதி வரை ஒரு கட்டமாகவும், தீபாவளி விடுமுறை முடிந்து, அக்டோபர் 27 முதல் நவம்பர் 5ந் தேதி இரண்டாம் கட்டமாக என 11 நாட்கள் மாவட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அனைத்து பிரிவினருக்கான தடகள போட்டி வரும் 27, 28ந் தேதி 2 நாட்கள் நடக்கிறது.

இது குறித்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) முருகேஸ்வரி கூறுகையில், குறுமைய குழு போட்டியில் முதலிடம், ஒற்றையர், இரட்டையர் பிரிவு போட்டியில் முதலிடம் பெற்ற அணிகள், தடகள போட்டியில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றவர்கள், 400 மீ., 1,600 தொடர் ஓட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர் மாவட்ட விளையாட்டு போட்டியில் பங்கேற்கலாம். போட்டிகள் நடக்கும் நாள், எந்த பள்ளி, நேரம் குறித்த அட்டவணை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறுமைய அளவில் வெற்றி பெற்று தேர்வாகிய மாணவர், மாணவிகள் பள்ளி அணி கட்டாயம் மாவட்ட போட்டியில் பங்கேற்று விளையாட வேண்டும். இல்லையேல் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போட்டி துவங்கும் நேரத்துக்கு (காலை 7 மணி) முன்பாக பள்ளிக்கு வர வேண்டும் என்றார்.

Tags:    

Similar News