உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பாத்திர தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை

Published On 2022-12-03 06:19 GMT   |   Update On 2022-12-03 06:19 GMT
  • பித்தளை, எவர் சில்வர், செம்பு ஆகிய உலோகங்களில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • பாத்திர பட்டறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 3ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

அனுப்பர்பாளையம் :

திருப்பூர் அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம் உள்ளிட்ட பகுதியில் 250க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன.பித்தளை, எவர் சில்வர், செம்பு ஆகிய உலோகங்களில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இத்தொழிலை நம்பி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். பாத்திர பட்டறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 3ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.கடந்த முறை 2019 டிசம்பர் மாதம் 31ந் தேதி சம்பள ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தம் வருகிற டிசம்பர் 31ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த முறை எவர்சில்வர் பாத்திரங்களுக்கு 21 சதவீதம், பித்தளை பாத்திரங்களுக்கு 30 சதவீதம், ஈய பூச்சு பாத்திரங்களுக்கு 37 சதவீதம், செம்பு பாத்திரங்களுக்கு 30 சதவீதம் சம்பளம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சி.ஐ.டி.யு., பாத்திர சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்க செயலாளர் குப்புசாமி, தலைமையில் நடந்தது.ஒரு வாரத்தில் அனைத்து கட்சி பாத்திர தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து, அதில் சம்பள ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது, அதை தொடர்ந்து பாத்திர உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News