உள்ளூர் செய்திகள்

போலி விதைகளால் பாதிப்பு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் - விவசாயிகள் அறிவிப்பு

Published On 2022-12-09 05:00 GMT   |   Update On 2022-12-09 10:59 GMT
  • வேளாண் துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு போலி விதைகளை விற்பனை செய்த உரக்கடை , மக்காச்சோளம் கம்பெனி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • 0 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் சாகுபடி அறுவடை சமயத்தில் இரண்டு மூன்று கதிர்கள் வந்ததால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

உடுமலை : 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்து இருந்த நிலையில் தற்போது போலி விதைகளால் ஒரு கதிர் பிடிக்க வேண்டிய தருணத்தில் தற்பொழுது இரண்டு, மூன்று என வந்துள்ளதால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண்துறை இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:- குடிமங்கலம் பகுதியில் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணை தண்ணீரின் மூலம் விவசாயிகள் அதிகளவு மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகிறோம்.

இந்தநிலையில் பூளவாடி பகுதியில் உள்ள உரக்கடை மூலம் மக்காச்சோளம் விதை வாங்கி நடவு செய்த நிலையில் தற்பொழுது சுமார் 10 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் சாகுபடி அறுவடை சமயத்தில் இரண்டு மூன்று கதிர்கள் வந்ததால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு ஏக்கருக்கு 40 குவிண்டாலுக்கு மேல் வரும் என விளம்பரப்படுத்தி வழங்கபட்டபோலி விதைகளால் பாதி அளவு கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு போலி விதைகளை விற்பனை செய்த உரக்கடை , மக்காச்சோளம் கம்பெனி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் விவசாயிகள் ஏக்கருக்கு 50 ஆயிரம் செலவு செய்து இருக்கும் நிலையில் உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . தவறும் பட்சத்தில் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News