உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வனத்தீயால் பல்லுயிர் பெருக்கம் தடைபடும் - ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரி எச்சரிக்கை

Published On 2023-04-20 08:48 GMT   |   Update On 2023-04-20 08:48 GMT
  • வனத்தீ பரவலால் வனம் மற்றும் வன விலங்குகள் பாதிக்கும்.
  • மரங்களின் இலைகள் சேமித்து வைத்துள்ள கார்பன் டை ஆக்ஸைடு போன்ற நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து நோய்களை ஏற்படுத்தும்.

உடுமலை :

திருப்பூர் மாவட்டத்தில் வனத்தீ தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடி க்கை குறித்து ஆனைமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் கணேஷ்ராம் கூறியதாவது :- திருப்பூர் வனக்கோட்ட த்தில் திருப்பூர் நகரம், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட திருப்பூர் சார்ந்த நகர, ஊரகப் பகுதிகளில் வனப்பரப்பு இல்லை. அங்கு வனத்தீ ஏற்படவும் வாய்ப்பும் இல்லை. அதே நேரம் உடுமலை சார்ந்த பகுதி களில் தளிஞ்சி, மஞ்சம்பட்டி, கோடந்தூர், பொருப்பாறு உள்ளிட்ட இடங்களில் 17 செட்டில்மென்ட் உள்ளன.அங்கு வாழும் மக்களிடம் வனத் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டு வருகிறது.வனத்தீ பரவலால் வனம் மற்றும் வன விலங்குகள் பாதிக்கும். சுற்றுச்சூழல் மாசுபடும். சோலைக்கா டுகள், புல்வெளிகளில் உள்ள இயற்கை நீரூற்றுகள் அடைபடும்.தண்ணீர் வழிந்தோடி செல்வது தடைபடும். வனத்தீயால் மரங்களின் இலைகள் சேமித்து வைத்துள்ள கார்பன் டை ஆக்ஸைடு போன்ற நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து மக்களுக்கு பலவித நோய்களை ஏற்படுத்தும். புழு பூச்சிகள் உட்பட பல்வேறு உயிரினங்கள் பாதிக்கும்.பல்லுயிர் பெருக்கம் தடைபடும்.

இது வனப்பகுதி சார்ந்த பகுதிகளுக்கு மட்டுமின்றி வனப்பரப்பு இல்லாத புல், புதர், செடி, கொடிகள் நிறைந்த பகுதிகளுக்கும் பொருந்தும். எனவே ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைக்கு தீ வைப்பது, புகைப்பிடித்து, தீயை, புல்வெளிகள் மீது வீசுவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News