உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணை ஏமாற்றிய டிரைவர் கைது

Published On 2023-06-09 06:40 GMT   |   Update On 2023-06-09 06:40 GMT
  • திருமணம் ஆகாத இளம் பெண்ணை காதலித்து, திருமணம் செய்துக் கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
  • பெண்ணின் பெற்றோா் காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

காங்கயம் :

வெள்ளக்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (வயது 38). திருமணமான இவா், தனியாா் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா்.

இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காங்கயம் பகுதியைச் சோ்ந்த 23 வயது திருமணம் ஆகாத இளம் பெண்ணை காதலித்து, திருமணம் செய்துக் கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோா் காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, இளம் பெண்ணை ஏமாற்றிய நபரை புதன்கிழமை கைது செய்தனா்.

Tags:    

Similar News