உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

காலாவதி தேதி இன்றி உணவுப்பொருட்கள் விற்பனை பொதுமக்கள் புகார்

Published On 2022-09-30 11:04 GMT   |   Update On 2022-09-30 11:04 GMT
  • உணவு பாதுகாப்பு விதிமுறையின்படி விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் எடை, விற்பனை விலை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.
  • அதிகாரிகளின் சுணக்கம் காரணமாக தரமற்ற உணவு பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது

திருப்பூர் :

உணவு பாதுகாப்பு விதிமுறையின்படி விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் எடை, விற்பனை விலை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான உணவுப் பொருட்களில் மேற்கூறிய விவரங்கள் எதுவும் இன்றி வெளிப்படையாக வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

இதுபோன்று தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாமல் விற்கப்படும் உணவுப் பொருட்களால் பொது மக்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் சுணக்கம் காரணமாக, தரமற்ற உணவு பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது.இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை வட்டார அலுவலர் கேசவராஜ் கூறுகையில், இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News