உள்ளூர் செய்திகள்

தூய்மைப்பணியில் ஈடுபட்ட பணியாளர்கள். 

முதல்வர் வருகை - உடுமலையில் சாலை சீரமைப்பு பணிகள் தீவிரம்

Published On 2022-07-05 05:39 GMT   |   Update On 2022-07-05 05:39 GMT
  • சாலையின் நடுவில் உள்ள செடிகளைசுற்றி உள்ள களையை எடுத்தும் பராமரித்தும் மண் கொட்டி சமப்படுத்தி வருகின்றனர்.
  • முக்கிய வீதிகள் மற்றும் சாலைகள் தூய்மைப்படுத்தும் பணியிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

உடுமலை :

உடுமலை அமராவதியில் உள்ள சைனிக் பள்ளியில் வருகிற 16-ந்நதேதி நடைபெறும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடுமலை வருகிறார்.

முதல்வரின் வருகையை ஒட்டி உடுமலை நகரை தூய்மை நகரமாக்க நகராட்சி பணியாளர்கள் சாலையின் நடுவில் உள்ள செடிகளைசுற்றி உள்ள களையை எடுத்தும் பராமரித்தும் மண் கொட்டி சமப்படுத்தி வருகின்றனர். மேலும் உடுமலையில் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகள் தூய்மைப்படுத்தும் பணியிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News