உள்ளூர் செய்திகள்

அருள்புரம் ஜெயந்தி பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விழிப்புணர்வு மேற்கொண்ட காட்சி.

பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போக்சோ சட்டம் பற்றி விழிப்புணர்வு

Published On 2023-06-19 07:52 GMT   |   Update On 2023-06-19 07:52 GMT
  • அன்றைய வாழ்க்கை பயணம் என்பது போக்குவரத்து இல்லாத சாலை போன்று இருந்தது.
  • சமூக வலைதளம், தொலைக்காட்சி என மாணவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் உள்ளன.

பல்லடம் :

திருப்பூர் அருகே அருள்புரத்தில் ஜெயந்தி பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு போதை பொருள் ஒழிப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளி தாளாளர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் விஜயராகவன் வரவேற்றார். பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் மற்றும் பிரவீன் பானு ஆகியோர் பேசுகையில் "அன்றைய வாழ்க்கை பயணம் என்பது போக்குவரத்து இல்லாத சாலை போன்று இருந்தது. இன்று சமூக வலைதளம், தொலைக்காட்சி என மாணவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் உள்ளன. இன்றைய சமுதாயத்திற்கு தொலைபேசி மிகப்பெரிய சவாலாக உள்ளது. அடுத்ததாக மாணவர்களின் சமுதாயத்தை சீரழிப்பதாக போதைப்பொருள் பழக்கம் உள்ளது. மிகவும் கவனமாக இருந்தால் மட்டுமே இடையூறுகளை தாண்டி உங்களது இலக்கை நோக்கி செல்ல முடியும். போதை பழக்கம் குறித்து விழிப்புணர்வு இல்லாமலேயே மாணவர்கள் அதில் சிக்கிக்கொண்டு தங்களது வாழ்க்கையை இழக்கின்றனர். புதிதாக சந்தைக்கு வரும் சாக்லேட் குறித்து தெரியாமல் வாங்காதீர்கள். ஏனெனில் அதில் போதைப்பொருள் சிறிய அளவில் சேர்க்கப்படுவதால் அதனை சாப்பிட்டு நாளடைவில் அதற்கு அடிமையாகி விடும் அவலம் உள்ளது. மாணவர்களாகிய உங்களை நம்பியே இந்த சமுதாயம் உள்ளது '' என்றனர்.

Tags:    

Similar News