உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் அமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல் பேசிய காட்சி. 

ஆவின் பூத்களில் தென்னீரா பானம் விற்பனை செய்ய வேண்டும் - தென்னை உழவர் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

Published On 2022-08-18 12:10 GMT   |   Update On 2022-08-18 12:10 GMT
  • தென்னீரா இயற்கை பானம் கடந்த 7 மாதங்களில் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
  • 5 லட்சம் தென்னீரா பானம் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பல்லடம் :

பல்லடத்தில் உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளையின் வனாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைப்பின் தலைவரும், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவருமான பப்பிஸ் ஏ.சக்திவேல் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். வாவிபாளையம் வெ,அனந்தகிருஷ்ணன் இறைவணக்கம் பாடினார். ஆண்டறிக்கையை நிர்வாக மேலாளர் இளங்கோவும், எதிர்கால திட்டம் குறித்து இணை நிர்வாக இயக்குநர் ஸ்கை சுந்தரராஜ், கோவை வேளாண் வணிகம் துணை இயக்குநர் சுந்தரவடிவேல் ஆகியோர் பேசினார்கள்.

கூட்ட முடிவில் பொருளாளர் பச்சையப்பன் நன்றி கூறினார். பின்னர் நிர்வாக இயக்குநர் .பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில்:- உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோரால் அறிமுகம் செய்யப்பட்ட தென்னீரா இயற்கை பானம் கடந்த 7 மாதங்களில் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 5 லட்சம் தென்னீரா பானம் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் கட்டமாக கோவை,திருப்பூர், சேலம்,ஈரோடு போன்ற அருகாமையில் உள்ள மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இனி தமிழகம் முழவதும் விற்பனையை அதிகரிக்கவும், ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளோம். தென்னீராவை அரசு பானமாக அறிவிக்க வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த சோகை வராமல் தடுக்கவும் ஊட்டச்சத்து அதிகரிக்கவும் தென்னீரா பானத்தை அரசு இலவசமாக வழங்க உத்தரவிட வேண்டும். திருமணம், அரசு விழாக்களில் பொதுமக்களுக்கு தென்னீரா பானம் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து ஆவின் பூத்களிலும் தென்னீரா பானம் விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News