உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மு.க.ஸ்டாலின் நாளை வருகை திருப்பூரில் 1500 போலீசார் பாதுகாப்பு

Published On 2022-08-23 11:47 GMT   |   Update On 2022-08-23 11:47 GMT
  • தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
  • தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்கி கயிறு தொழில்களை தொடங்கி வைக்கிறார்.

திருப்பூர் :

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24, 25,26-ந் தேதிகளில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெற உள்ள அரசு விழாக்களில் பங்கேற்கிறார். இதையொட்டி நாளை 24-ந்தேதி இரவு பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இரவு திருப்பூர் வருகிறார். அவருக்கு பல்லடம் வடுகபாளையம் அருகே தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் திருப்பூரில் இரவு தங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 25-ந்தேதி காலை 10மணிக்கு பாப்பீஸ் ஓட்டலில் நடக்கும் குறு, சிறு தொழில்துறை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதில் தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்கி கயிறு தொழில்களை தொடங்கி வைக்கிறார். விழா நிறைவு பெற்றதும் மதியம் ஈரோட்டில் நடக்கும் விழாவுக்கு செல்கிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் மேற்பார்வையில், 2 துணை கமிஷனர்கள், 2 உதவி கமிஷனர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

திருப்பூா் மாநகருக்கு நாளை மாலை வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்லடம் சாலை சந்தைப் பேட்டை, திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு, அண்ணா பெரியாா் சிலை, புஷ்பா ரவுண்டானா, குமாா் நகா் ஆகிய இடங்களில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

மேலும் இரண்டாம் நாளான 25-ந்தேதி( வியாழக்கிழமை) காலை 8 மணி அளவில் திருப்பூர் 60 அடி சாலை, எஸ்ஏபி .திரையரங்கம், பெரியாா் காலனி, அனுப்பா்பாளையம், திருப்பூா் ஒன்றியம் பெருமாநல்லூா் ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. எனவே வரவேற்பு அளிக்கும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். அதற்கான முன்னேற்பாடு பணிகளை கமிஷனர் பிரபாகரன் மேற்பார்வையில் போலீஸ் உயர்அதிகாரிகள் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.பல்லடத்தில் மாவட்ட எஸ்.பி.சசாங்சாய் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

Tags:    

Similar News