உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

கோவில் விழா பாட்டு கச்சேரியில் நடனம் ஆடியதில் கோஷ்டி மோதல்

Published On 2022-06-23 09:53 GMT   |   Update On 2022-06-23 09:53 GMT
  • போலீசார் தடியடி
  • வாலிபர் மண்டை உடைப்பு

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த அயித்தம்பட்டு, கட்ட வாரி பள்ளியில் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நடந்தது. திருவிழாவையொட்டி நேற்று இரவு பாட்டு கச்சேரி நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து பாடலுக்கு ஏற்றவாறு நடனம் ஆடினர்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை தடியடி நடத்தி விரட்டினர். போலீசார் தாக்கியதில் திலக் ராஜ் (வயது 28) என்பவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.திலக்ராஜை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து

அப்பகுதி மக்கள் நள்ளிரவில் உமராபாத் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இன்ஸ்பெக்டர் யுவராணி மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் தடியடியை கண்டித்து பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News