உள்ளூர் செய்திகள்

மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருப்பத்தூரில் போக்குவரத்து மாற்றம்

Published On 2022-06-28 10:00 GMT   |   Update On 2022-06-28 10:00 GMT
  • நகர் பகுதியில் வாகனங்களில் சரக்குகளை ஏற்றி இறக்க தடை.
  • காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அமலில் இருக்கும்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் வருகை தர உள்ளதையொட்டி திருப்பத்தூர் மாவட்ட போலீசார் சார்பில் பொது போக்குவரத்து வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சென்னை வேலூர் மார்க்கத்தில் இருந்து சேலம் தர்மபுரி மார்க்கமாக செல்லும் அனைத்து கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் செட்டியபன்னூர் வழியினை தவிர்த்து தேசிய நெடுஞ்சாலை வழியாக கிருஷ்ணகிரி செல்ல வேண்டும், பர்கூர் கூட்டு சாலையில் இருந்து திருப்பத்தூர் வழியாக வேலூர் செல்லும் அனைத்து கனரக சரக்கு வாகனங்கள் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மார்க்கமாக திருப்பத்தூர் வழி வேலூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வெங்களாபுரம் கூட்டு சாலை வழியாக ஆலங்காயம் வாணியம்பாடி வழியாக செல்ல வேண்டும், உள்ளூர் சரக்கு வாகனங்கள் கனரக வாகனங்கள் வருகிற 29-ந் தேதி காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை திருப்பத்தூர் நகர் பகுதியில் சரக்குகளை ஏற்றி இறக்க மற்றும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுப் போக்கு வரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மாற்றுப் பாதைகள் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி வேலூர் போன்ற வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ் ஏரிகோடி வழியாகக் மடவாளம் கூட்டு சாலைசென்று அவர்களது ஊர்களுக்கு செல்ல வேண்டும் தவிர பொன்னியம்மன் கோவில் தெரு வழியாக அனுப்பப்பட மாட்டாது, 29-ந் தேதி திருவண்ணாமலையில் இருந்து வரும் பொது போக்குவரத்து வாகனங்கள் பஸ்கள், கார்கள், அனைத்தும் வேலூர் செல்ல வெங்களாபுரம் கூட்டு சாலை வழியாக ஆலங்காயம் வாணியம்பாடி வழி செல்ல வேண்டும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மார்க்கமாக வேலூர் செல்ல வேண்டிய அனைத்து வாகனங்கள் அவ்வை நகர் சி கே ஆசிரம வழியாக புதுப்பேட்டை நாட்றம்பள்ளி வழியாக வேலூர் செல்ல வேண்டும், கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் தவிர்த்து மற்ற வாகனங்கள் நகருக்குள் பொது போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வாறு அனுமதிக்கப்படும் என திருப்பத்தூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News