உள்ளூர் செய்திகள்

சுய உதவிக் குழுக்களுக்கு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் முகாம் நடைபெற்றது.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு விழிப்புணர்வு முகாம்

Published On 2022-06-24 10:40 GMT   |   Update On 2022-06-24 10:40 GMT
  • திருப்பத்தூரில் நடந்தது
  • விவசாயிகள், பெண்கள் கலந்துகொண்டனர்

திருப்பத்தூர் :

பெண் விவசாயிகளுக்கு மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு வேளாண்வி ற்பனை மற்றும் வணிகத்துறை சார்பாக விழிப்புணர்வு முகாம் வெங்களாபுரம் பிரீடம் பவுண்டேஷன் தொண்டு நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வள அலுவலர் த.அரவிந்தன் வேளாண் துறை மூலம் சிறு தொழில் தொடங்குவதை பற்றியும், அதற்கான மானியம் பெறுவது பற்றியும், விற்பனை செய்வது பற்றி விளக்கி கூறினார்.

வேளாண் துறை உதவி அலுவலர் ஜெயபால் வங்கியில் கடன் பெறுவதைப் பற்றியும், உணவு பதப்படுத்தல் தொழில் செய்வதற்கு கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், இடலி மாவு, கேழ்வரகு மாவு, மிளகாய் தூள் அரைக்கும் எந்திரம் வாங்க வேளாண் துறையில் இருந்து 35 சதவீத மானியம் கிடைக்கும் இதனை விவசாயிகள் மற்றும் சுய உதவி குழு பெண்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என பேசினார் சிறு தொழில் செய்வதில் விவசாயத்தில்பெண்கள் முக்கிய பங்கு குறித்து பீரீடம் பவுண்டேஷன் நிறுவனர் ராமச்சந்திரன், உட்பட பலர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஏராளமான பெண் விவசாயிகள் மற்றும் சுய உதவி குழுக்கள் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர் இறுதியில் மேலாளர் சசிகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News