உள்ளூர் செய்திகள்

வளசரவாக்கத்தில் பிளஸ்-2 மாணவன் மாயம்

Update: 2022-07-03 10:09 GMT
  • வளசரவாக்கம், திருநகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் குமார்.
  • பள்ளி முடிந்ததும் தினசரி மாலையில் ராமாபுரத்தில் உள்ள கராத்தே பயிற்சி பள்ளிக்கு செல்வது வழக்கம்.

போரூர்:

வளசரவாக்கம், திருநகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ஜெயபிரகாஷ் (வயது17). நெசப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அவர் பள்ளி முடிந்ததும் தினசரி மாலையில் ராமாபுரத்தில் உள்ள கராத்தே பயிற்சி பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை கராத்தே பள்ளிக்கு சென்ற ஜெயபிரகாஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை வளசரவாக்கம் போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News