உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு

Published On 2022-12-20 04:42 GMT   |   Update On 2022-12-20 04:42 GMT
  • நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது.
  • நேற்று முன்தினம் விநாடிக்கு 7,600 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று விநாடிக்கு 5,600 கனடியாக சரிந்தது. இன்றும் நீர்வரத்து அதே நிலையில் நீடிக்கிறது.

மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 9000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 8,000 கன அடியாக சரிந்துள்ளது.

அதேபோல், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 7,600 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று விநாடிக்கு 5,600 கனடியாக சரிந்தது. இன்றும் நீர்வரத்து அதே நிலையில் நீடிக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு, நீர்மின்நிலையங்கள் வழியாக விநாடிக்கு 5,000 கன அடி வீதமும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 12-வது நாளாக 120 அடியாக உள்ளது.

Tags:    

Similar News