உள்ளூர் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்தது
- சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 குறைந்து ரூ.39 ஆயிரத்து 144-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4 ஆயிரத்து 893 ஆக உள்ளது.
- வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.64 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.20-க்கு விற்கிறது.
சென்னை:
தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. நேற்று பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.39 ஆயிரத்து 200-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது.
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 குறைந்து ரூ.39 ஆயிரத்து 144-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4 ஆயிரத்து 893 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.64 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.20-க்கு விற்கிறது.