உள்ளூர் செய்திகள்

புரட்டாசி மாதம் எதிரொலி- முட்டை விலை ரூ.4.10 ஆக சரிந்தது

Published On 2022-10-02 04:48 GMT   |   Update On 2022-10-02 04:48 GMT
  • முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது.
  • பொதுவாக தட்பவெட்ப நிலை, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 6 கோடிக்கும் மேல் முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கும், பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. பொதுவாக தட்பவெட்ப நிலை, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

தற்போது புரட்டாசி மாதம் நடைபெறுவதால் பெரும்பாலான மக்கள் அசைவ உணவை தவிர்ப்பது வழக்கம். இதனால் முட்டை நுகர்வோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு பண்ணைகளில் ரூ. 4.50 ஆக இருந்த ஒரு முட்டை கொள்முதல் விலை கடந்த வாரம் ரூ. 4.30 ஆக சரிந்தது.

இந்த நிலையில் புரட்டாசி மாதத்தையொட்டி பண்ணைகளில் தொடர்ச்சியாக முட்டைகள் தேக்கம் அடைந்து வருவதால் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலையை குறைக்க பண்ணையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டை விலை ரூ.4.10 ஆக நிர்ணயம் செய்துள்ளது.

Tags:    

Similar News