உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் பேரூராட்சியில் மஞ்சள் பை பயன்படுத்த விழிப்புணர்வு பேரணி

Published On 2022-06-25 06:21 GMT   |   Update On 2022-06-25 06:21 GMT
  • கடற்கரை கோயில் எதிரில் விழிப்புணர்வு வீதி நாடகம், மீண்டும் மஞ்சள் பை.
  • கல்லூரி மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று வீடுதோறும் என் குப்பை எனது பொறுப்பு.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சி சார்பில் இன்று காலை பேரூராட்சி நிர்வாக இணை இயக்குனர் மலையான் திருவடிகாரி தலைமையில், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் குப்பைகளை மக்கும் குப்பை என்று மக்காத குப்பை தரம் பிரித்து கையாளுவது குறித்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து செயல் அலுவலர் கணேசன், தலைவர் வளர்மதி எஸ் வந்த்ராவ், வார்டு உறுப்பினர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று வீடுதோறும் என் "குப்பை எனது பொறுப்பு" என்ற தலைப்பில் குப்பைகளை தரம் பிரிக்க அறிவுறுத்தினர்., தொடர்ந்து கடற்கரை கோயில் எதிரில் விழிப்புணர்வு வீதி நாடகம், மீண்டும் மஞ்சள் பை பயன்பாடு பற்றிய கண்காட்சி நடத்தப்பட்டது.

Tags:    

Similar News