உள்ளூர் செய்திகள்

சின்னம் பள்ளி அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

Published On 2022-06-23 10:36 GMT   |   Update On 2022-06-23 10:36 GMT
  • நாய்கள் துரத்தியதால் கிணற்றில் புள்ளிமான் பாய்ந்தது.
  • தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் அந்த புள்ளி மானை சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டனர்.

பெரும்பாலை, 

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த சின்னம் பள்ளியில் நேற்று மாலை புள்ளிமானை நாய் ஒன்று விரட்டியது.

இதில் நாய்க்கு பயந்து சோளி கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தோட்டத்தில் கிணற்றில் புள்ளிமான் விழுந்து தண்ணீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

அதைக் கண்ட கிணற்றின் உரிமையாளர் செந்தில்குமார் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.

அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறை யினர் வனச்சரகர் அருண் பிரசாந்த் வனகர் அரவிந்த் மற்றும் தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் அந்த புள்ளி மானை சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டனர்.

மீட்ட புள்ளிமானை அருகிலுள்ள கலப்பம்பாடி வனத்துக்குள் வனத்துறை யினர் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

Similar News