உள்ளூர் செய்திகள்

வீட்டு மனை பட்டா கேட்டு தீக்குளிக்க முயன்றவர்களை படத்தில் காணலாம்.

திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் வீட்டுமனை பட்டா கேட்டு தீக்குளிக்க முயற்சி

Published On 2022-06-27 08:10 GMT   |   Update On 2022-06-27 08:10 GMT
  • திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மனுதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
  • வீட்டு மனை பட்டா வழங்காததை கண்டித்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள வன்னிய பாறைப்பட்டியைச் சேர்ந்த பால தண்டாயுதபாணி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 15 குடும்பத்தினர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்கள் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்காததை கண்டித்து தீக்குளிக்க முயன்றனர். உடனே அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்த போது அவர்கள் ெதரிவிக்கையில், வன்னிய பாறைப்பட்டியில் 30 குடும்பத்தினர் வீடு கட்டி பெரியகோட்டை கிராமம் சர்வே எண்களின் திண்டுக்கல் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு ஆவணங்கள் மூலம் கிரையம் வாங்கினோம். ஆனால் உட்பிரிவு செய்து பட்டா வழங்க கோரி திண்டுக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்தும் இது வரை பட்டா வழங்கப்படவில்லை. கோர்ட்டு மூலம் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றனர்.

மேலும் இந்த குடியிருப்பு பகுதியில் முறையான சாலை வசதி, குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதி செய்து தர மறுக்கின்றனர்.

எனவே எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் அளித்துச் சென்றனர்.

Tags:    

Similar News