உள்ளூர் செய்திகள்

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சேர்க்கைக்காக குவிந்துள்ள கூட்டத்தின் ஒரு பகுதி.

முதல்-அமைச்சர் நடவடிக்கையால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது

Published On 2022-06-13 09:59 GMT   |   Update On 2022-06-13 09:59 GMT
  • பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
  • அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் அரசு பள்ளிகளில் உள்ளன.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்ப ட்டதை அடுத்து மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சை கீழராஜ வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது.

அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்க ப்பட்டன. முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நடவடிக்கையால் அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். பல பெற்றோரும்தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ .1000 வழங்குதல் என்பன உள்ளிட்ட

பல்வேறு சலுகை களை முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அறிவித்து ள்ளார். மேலும் அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் அரசு பள்ளிகளில் உள்ளன. இதன் காரணமாக அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த பள்ளியில் கூட முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகளவில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது உடன் மாவ ட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி இருந்தார்.

Tags:    

Similar News