உள்ளூர் செய்திகள்

விழாவில் ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் அன்னதானத்தை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

உலக நன்மை வேண்டி பூமிஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2023-02-20 07:40 GMT   |   Update On 2023-02-20 07:40 GMT
  • பூமிஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  • திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி பூமிஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு 2 நாட்கள் நடைபெற்றது.

முதல் நாள் காலையில் கணபதி ஹோமம் மற்றும் யாக பூஜை நடந்தது. பின்னர் சுவாமிக்கும், வீரசக்கதேவி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. இரவில் 308 திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 40 பேருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள சில்வர் பாத்திரங்களை திருச்செந்தூர் வட்டார த.மா.கா. தலைவர் சுந்தர்லிங்கம், ஆறுமுகநேரி நகர தலைவர் முருகன், டயானா முருகப்பெருமாள் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து சமய சொற்பொழிவும் சிறப்பு பூஜையும் நடந்தது.

2- வது நாளான நேற்று காலையில் சிறப்பு அபிஷேக தீபாராதனையும், மதியம் அலங்கார சிறப்பு பூஜையும் நடந்தன. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

இதனை ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிகளில் பேரூ ராட்சி துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், கோவில் நிர்வாகி முருகன், தொழிலதிபர் பூபால் ராஜன், சிங்கராஜ் பிரபு, முருகேசன், ஆனந்தவேல் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News