உள்ளூர் செய்திகள்

தென்காசி உதவி போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்த காட்சி.




குற்றாலத்தில் பாம்புகள் தின விழிப்புணர்வு பேரணி

Published On 2022-07-17 08:51 GMT   |   Update On 2022-07-17 08:51 GMT
  • பேரணி சிறுவர் பூங்காவில் தொடங்கி குற்றாலம் மெயின் அருவி , கோவில் வாசல் மற்றும் முக்கய வீதிகள் வழியாக வன அலுவலக முகாமில் நிறைவடைந்தது.
  • வனச்சரக அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

தென்காசி:

உலக பாம்புகள் தினத்தை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு வனத்துறை தேசிய பசுமை படை, ரோட்டரி கிளப் குற்றாலம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ராமசுவாமி பிள்ள மேல் நிலைப் பள்ளி விலங்குகள் பாதுகாப்பு அரக்கட்டளை இணைந்து குற்றாலத்தில் விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

நிகழ்ச்சிக்கு வனச்சரக அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.கிரீன் சேம்பியன் முனைவர் விஜயலட்சுமி, குற்றாலம் ரோட்டரி சங்க தலைவர் இலஞ்சி குமரன் வனவர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார் . தென்காசி போலீஸ் உதவி சூப்பிரண்டு மணிமாறன் பாம்புகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி சிறுவர் பூங்காவில் தொடங்கி குற்றாலம் மெயின் அருவி , கோவில் வாசல் மற்றும் முக்கய வீதிகள் வழியாக வன அலுவலக முகாமில் நிறைவடைந்தது. பாம்புகள் குறித்த விழிப்புணர்வு உரை சேக்உசேன் வழங்கினர். தலைமை ஆசிரியர் ஆறுமுகம் பங்கு பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாரட்டு சான்று வழங்கினார். விழாவில் இன்ஸ்பெக்டர், போக்குவரத்து காவல் ஆய்வாளர், வனகாவலர்கள் கலந்து கொண்டனர். குற்றாலம் ரோட்டரி சங்க செயலாளர் கணபதி ராமன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News