உள்ளூர் செய்திகள்

விழாவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

சுதந்திர தினவிழாவில் அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன

Published On 2023-08-16 09:59 GMT   |   Update On 2023-08-16 09:59 GMT
  • Saplings were planted in government school on Independence Day
  • தொடர்ந்து, போதை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் ஏ.எம்.சி. லயன்ஸ் சங்கம் சார்பில் ஈச்சங்கோட்டையில் உள்ள அரசினர் மேல்நி லைப்பள்ளியில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தா மரை தலைமை தாங்கினார்.

சங்க தலைவர் லயன் மனோஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் லயன் எஸ்தர் சாந்தினி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் வீரமணி வாழ்த்துரை வழங்கினார்.

பின்னர், சங்கம் சார்பில் பள்ளி வளாகத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டது.

தொடர்ந்து, 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

பின்னர், பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு 2 சீலிங் பேன்கள் வழங்கப்பட்டது.

மாணவர்கள் நூலகத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்காக நூலகத்திற்கு 50 புத்தகங்கள் வழங்கப்பட்டது.

முடிவில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, எஸ்தர் சாந்தினி ஸ்டாலின் பள்ளியில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

விழாவில் சங்க ஆலோசகர் லயன் ஸ்டாலின் பீட்டர் பாபு, செயலாளர் லயன் காயத்திரி, சங்க ஜி.எல்.டி. ஒருங்கிணைப்பாளர் லயன் அமிர்தராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News