என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sapling"

    சீர்காழி புத்தூர் அரசு கலை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.
    சீர்காழி:

    தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் சுற்றுச்சூழலை காக்கும் முயற்சியை பின்பற்றும் விதமாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புத்தூரில் உள்ள பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையில் மூன்றாமாண்டு படித்து இந்த ஆண்டு படிப்பை முடித்து கல்லூரியிலிருந்து விடைபெறும் 

    மாணவர்கள் அவர்களின் நினைவாக 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டு தங்களின் நன்றியை கல்லூரிக்கு செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர். கி.விஜயலட்சுமி வணிகவியல் துறைத்த லைவர் முனைவர். மு. திருநா ராயணசாமி மற்றும் துறை பேராசிரியர்கள் முனைவர் வே.மகேஸ்வரி முனைவர் வே.சுரேஷ் முனைவர் ம.ராஜசேகர் முனைவர் வ.தம்பிஞானதயாளன் ஆகியோர் கலந்து கொ ண்டனர். 

    கல்லூரியிலிருந்து விடை பெறும் மாணவர்கள் இதுபோன்று மரக்கன்றுகளை நட்டு தங்களின் நினைவுகளை நிலைநாட்டும் நற்பண்பு களை கல்லூரி நிர்வாக மும் அனைத்துத் துறை பேராசிரியர்களும் மகிழ்வுடன் பாராட்டினர்.

    • பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் மற்றும் மதுரை சமூகப்பணித்துறையைச் சேர்ந்த 23 மாணவர்களும் கலந்து கொண்டு களப்பணியாற்றினர் .

    சிவகாசி

    இயற்கை வளங்களை பேணிகாக்கும் விதமாகவும், மழைபெறுவதற்கும், வளாகத்தை பசுமையாக மாற்றும் விதமாக, விருதுநகர் மாவட்டம் மற்றும் மதுரை மாவட்ட வருமானவரித்துறை, மதுரை விஷ்டு ஹெல்ப் அறக்கட்டளை மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்டம் சார்பில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி விழாவை தொடங்கி வைத்தார்.இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை, கூடுதல் ஆணையாளர் ரங்கராஜன், வருமானவரித்துறை ஆய்வாளர் மலையப்பன், ஆகியோர் கலந்து கொண்டனர். டீன் மாரிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 400 நாட்டு மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன.

    இதில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியை சேர்ந்த சுமார் 70 மாணவர்களும், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் மற்றும் மதுரை சமூகப்பணித்துறையைச் சேர்ந்த 23 மாணவர்களும் கலந்து கொண்டு களப்பணியாற்றினர் .

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், விருதுநகர், மதுரை மாவட்ட வருமானவரித்துறை அலுவலர் பணியாளர் குழு, மதுரை விஷ்டு ஹெல்ப் அறக்கட்டளை, கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்-பேராசிரியர் துர்க்கை ஈஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • இதில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, அதனை முறையாக பராமாிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளையின் சார்பில், கல்வி நிறுவனங்களில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் இயக்கம் செயல்படுத்திட திட்டமிடப்பட்டது.

    அதன் தொடக்கமாக காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு ''பசுமை தமிழகம்'' திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வானதி, இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை மருத்துவர்கள் மணிவண்ணன், காமாட்சி சந்திரன், ராசு, குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதிராஜன், சத்தியன், ராஜேஸ்வரி, பள்ளி தலைமையாசிரியர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பல் பரிசோதனை மருத்துவ முகாம், மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.
    • விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் பா.ஜ.க. நெசவாளர் பிரிவு சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல் பரிசோதனை மருத்துவ முகாம், மரக்கன்று வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் பொதுமக்களுக்கு பல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. மரக்கன்றுகளும் வழங்கப்ப ட்டன. 702 பேருக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கு நெசவாளர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் யு.என்.உமாபதி தலைமை தாங்கி னார். நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் கோபி, நெசவாள பிரிவு மாவட்ட பார்வையாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ். ராமலிங்கம், நெசவாளர் பிரிவு மாநில பார்வையாளர் சண்முகராஜ், மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது.
    • முதுகுளத்தூர் தாலுகா குமாரகுறிச்சி கிராமத்தில் முத்தமிழ் அறக்கட்டளை சார்பில் நடந்தது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா குமாரகுறிச்சி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முத்தமிழ் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடுவிழா ஊராட்சி மன்ற தொடக்கப்பள்ளியில் நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் சபரிமலைநாதன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக தலைமை ஆசிரியர் நாகவள்ளி, ஆசிரியைகள் வாகிதா யாஸ்மின், மாதவி, செவிலியர் ரஞ்சிதா கலந்து கொண்டனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் முத்து லட்சுமணன், ஹரிஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்ககேற்றனர். மகாத்மா காந்தியின் சிறப்பு குறித்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

    • மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் முதலுதவி பயிற்சிகள் செய்முறை அளிக்கப்பட்டது.
    • சிறப்பு விருந்தினர் மூலமாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றிய அளவில் ஜே.ஆர்.சி ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவர் ரேவதி ஜே.ஆர்.சி கொடியினை ஏற்றி முகாமினை துவக்கி வைத்தார்.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் சௌந்தர்ராஜன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்றத் தலைவர் ராஜீவ் காந்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முகம்மது யாசீன், வவ்வாலடி பள்ளியின் தலைமையாசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

    ஜே.ஆர்.சி யின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ ஆலோசகர் லியாக்கத் அலி திருப்பயத்தங்குடி, ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர் ஏசுநாதன் ஆகியோர் சுகாதாரம் தொடர்பான அறிவுரைகளை வழங்கினா்.

    திருமருகல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த அலுவலர்கள் மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் முதலுதவி பயிற்சிகளை செய்முறை விளக்கத்துடன் செய்து காட்டினர்.

    திருமருகல் வட்டார கல்வி அலுவலர் ரவி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    சிறப்பு விருந்தினர் மூலமாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    கொட்டாரக்குடி கிராமத்தைச் சுற்றிலும் 250 பனை விதைகள் விதைக்கப்பட்டன.

    முடிவில் பள்ளியின் ஜே.ஆர்.சி ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

    • தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பசுமை தமிழக இயக்கம் தொடக்க விழா மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
    • அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர்தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பசுமைத் தமிழக இயக்கம் தொடக்க விழா மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவன் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி மரக் கன்றுகளை நட்டு விழாவினை தொடங்கி வைத்தார். முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு, பல்கலைக்கழக துணை–வேந்தர் திருவள்ளுவன் நினைவு பரிசு வழங்கினார்.

    இந்நிகழ்வில் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி செழியன், தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தஞ்சை மாவட்ட வன அலுவலர்அகில்தம்பி, தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் தியாகராஜன், துணைப் பதிவாளர் பன்னீர்செல்வம் மற்றும் மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருநகரியில் நடந்த விழாவில் 350 பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நெப்பத்தூர் மீனாட்சி உதவிபெறும் தொடக்கபள்ளி மாணவர்களுக்கு குடைகளை வழங்கினார்.

    சீர்காழி:

    விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 60வது மணி விழா பிறந்தநாளையொட்டி திருவெண்காடு பகுதியில் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    விடுதலை கட்சியின் தலைவரும், எம்.பியுமான தொல்.திருமாவளவனின் மணிவிழா பிறந்தநாளை யொட்டி திருவெண்காடு பகுதியில் கட்சியினர் பல்வேறு நலத்திட்டஉதவி களை வழங்கினர்.

    திருநகரியின் நடந்த விழாவில் 350 பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழச்சிக்கு முன்னாள் நெப்பத்தூர் ஊராட்சி த்தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.

    கட்சி நிர்வாகி ஸ்டாலின் வரவேற்றார்.

    இதில் வி.சி.க முன்னாள் மாவட்ட செயலாளர் மா.ஈழவளவன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்.

    மேலும் அவர் கீழ நெப்பத்தூர் மேற்கு ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்க பட்டன.

    மேலும் நெப்பத்தூர் மீனாட்சி உதவிபெறும் தொடக்கபள்ளி மாணவ ர்களுக்கு குடைகள் ஆகியவற்றை வழங்கினார்.

    இதில் கட்சி நிர்வாகிகள் பாரதிவளவன், சிவக்குமார், ரகுராஜ் உள்ளிட்டதிரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இதனைதொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப ட்டன.

    • கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப் பட்டியில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் பள்ளி, கல்லூரி, மாணவ- மாணவிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

    கோபி,ஆக.26-

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப் பட்டியில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் பள்ளி, கல்லூரி, மாணவ- மாணவிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சுற்றுச்சூழல் அணி யின் மாநில அமைப்பாளர் கார்த்திகேய சிவ சேனாதிபதி தலைமை தாங்கினார் .வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கே. கே.செல்வன் முன்னிலை வகித்தார்.

    இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவ- மாணவி களுக்கு மரக்கன்று களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில்வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம், தி.மு.க. சுற்று ச்சூழல் அணியின் மாநில துணைச்செயலாளர்கள் மணிசுந்தர், பழ செல்வக்குமார், நாராயணமூர்த்தி,, உசிலம்பட்டி அருண், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி ஈரோடு தெற்கு மாவட்ட அமைப்பாளர் எல்லப்பாளையம் சிவகுமார், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் , திமுக. சுற்றுச்சூழல் அணி யின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சக்திவேல் மரக்கன்றுகள் நட்டு தொடக்கி வைத்தார்.
    • விழாவின் முடிவில் விடுதியின் பின்புறம் தென்னங்கன்றுகள் நடப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வேலூர் ஊராட்சி தண்டலச்சேரி அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் கொடிமேடை அமைத்து, தேசிய கொடியேற்றி,தென்னை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    நடைபெற்ற நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அ.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெ.சக்திவேல் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார்.மாணவியர் விடுதி காப்பாளினி வ.ஆனந்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.

    இந்து சமய அறநிலையத்துறை பணி நிறைவு தை.ஜெயபால், முன்னிலையில் வேளூர் கிராம நல விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் தங்கவேல்,செல்லப்பா, நாராயணன்,கல்லூரி பேராசிரியர் நடேச மகரந்தன்,வேளூர் தினேஷ் குமார், ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் வேதகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் இளம்பரிதி, கிருஷ்ணமூர்த்தி, கருணாநிதி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,பணிதள மகளிர் பொறுப்பாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கிராம பொதுமக்கள், கல்லூரி மாணவியர்கள், பெற்றோர்கள் விடுதி பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விடுதியின் பின்புறம் தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டது.

    • வழங்கப்பட்ட மரக்கன்று அனைத்தையும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதை கண்காணித்து மரமாக்க வேண்டும்.
    • சுகாதாரமான காற்று நல்ல மழை இயற்கை வளம் மற்றும் நோய் தொற்றில் இருந்து காப்பாற்ற அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் இயங்கும் பசுபதிகோவில் ஊர்ப்புற நூலகத்தில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக பசுபதிகோவில் ஊர்ப்புற நூலக வளாகத்தில் மரக்கன்று நடுதல் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க தஞ்சாவூர் மாவட்ட துணை தலைவரும் மற்றும் நூலகருமான முருகானந்தம் செய்து இருந்தார். கூட்டத்திற்கு அண்ணா மனு மலர்ச்சி ஊராட்சி நூலகர் பிச்சை ரெத்தினம் தலைமை தாங்கி வாசகர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மரகன்று வழங்கினார்.

    நூலகர் முருகானந்தம் நூலக வளாகத்தில் பள்ளி மாணவர்களை மரகன்று நட்டு மாண வர்களிடம்பேசுகை யில், மாவட்ட கலெக்டரின் உத்தரவுபடி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தன்னா ர்வர்கள் சார்பில் மாவட்டம் முழுவதும் மரக்கன்று நடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

    அதன் ஒரு பகுதியாக நமது நூலகம் மற்றும் நமது கிராம பகுதிகளில் இந்த திட்டம் சிறப்பாக நடத்த ப்பட்டது. வழங்கப்பட்ட மரக்கன்று அனைத்தையும் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதை கண்கா ணித்து மர மாக்க வேண்டும். நமக்கு சுகாதா ரமான காற்று நல்ல மழை இயற்க்கை வளம் மற்றும் நோய் தொற்றில் இருந்தும் காப்பாற்ற அனைவரும் மரங்களை வள ர்க்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் சரவணன், தாமஸ் பீர்முகமது, தமிழ்ச்செல்வி மற்றும் வாச கர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
    • துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அணிகள் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி எச்.டி.எப்.சி. வங்கியுடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    சிவகாசி கிளையின் வங்கி மேலாளர்கள் காசிராஜன், ஈஸ்வர மூர்த்தி மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு 300 மரக்கன்றுகளை வழங்கினர்.

    அவைகளை கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மனோஜ்குமார், ராஜூவ் காந்தி, தேவி ஆகியோர் நட்டு ஏற்பாடு செய்தனர்.

    ×