என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு நினைவு பரிசு
    X

    அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழிக்கு, தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் நினைவு பரிசு வழங்கினார்.

    அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு நினைவு பரிசு

    • தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பசுமை தமிழக இயக்கம் தொடக்க விழா மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
    • அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர்தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பசுமைத் தமிழக இயக்கம் தொடக்க விழா மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவன் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி மரக் கன்றுகளை நட்டு விழாவினை தொடங்கி வைத்தார். முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு, பல்கலைக்கழக துணை–வேந்தர் திருவள்ளுவன் நினைவு பரிசு வழங்கினார்.

    இந்நிகழ்வில் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி செழியன், தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தஞ்சை மாவட்ட வன அலுவலர்அகில்தம்பி, தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் தியாகராஜன், துணைப் பதிவாளர் பன்னீர்செல்வம் மற்றும் மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×