உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்களை படத்தில் காணலாம்.

சாலையோர ஆக்கிரமிப்புகளால் பாலக்கோட்டில் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

Published On 2022-09-09 09:29 GMT   |   Update On 2022-09-09 09:29 GMT
  • போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி அவசர ஊர்திகள் செல்லுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  • வாடிக்கையாளர்கள் சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், சொகுசு கார் உள்ளிட்ட வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வளரும் நகர்ப்பகுதியாக உள்ளது. நாளொன்றுக்கு உள்ளூர், வெளி மாவட்ட, மாநிலங்களுக்கு செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் என 200-க்கும் மேற்பட்டவாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சுற்று வட்டார பகுதியில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இதில் பாலக்கோடு சார் பதிவாளர் அலுவலகம் முதல் பேருந்து நிலையம், எம்.ஜி. ரோடு உள்ளிட்ட சாலையின் இரு புறங்களிலும் வணிக வளாகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள் என எப்போதும் பரபரப்பாக காணப்படும் இச்சாலையில் வணிக கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், சொகுசு கார் உள்ளிட்ட வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்துவதாலும், சாலை வரை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி அவசர ஊர்திகள் செல்லுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவது மட்டுமின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News