உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்.


பழனி பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Published On 2022-07-18 05:42 GMT   |   Update On 2022-07-18 05:42 GMT
  • பழனி பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது
  • பழனி பஸ் நிலையம், ஆக்கிரமிப்பு அகற்றம்

பழனி:

பழனியில் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடைக்காரர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தை விட கூடுதலான இடத்தை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இது தவிர சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகள் போன்றவற்றால் நகருக்குள் நுைழய முடியாத நிலை உள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள், வழிப்பறி கொள்ளையர்கள் பக்தர்களிடம் பணம் பறிக்கும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

பணம் மற்றும் உடமைகளை பறிகொடுத்த பக்தர்கள் போலீஸ் நிலையங்களுக்கு செல்ல தயங்கி திரும்பிச் சென்று விடுகின்றனர். இதனால் கொள்ளையர்கள் தொடர்ந்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி வழிப்பறியில் ஈடுபடுவது நடந்து வருகிறது.

இது தவிர சாலையோர குடிமகன்கள் ஆங்காங்கே மயங்கி கிடக்கும் நிலையும் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பு பகுதிகளை கண்டறிந்து அதனை அகற்ற நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.

ஆணையாளர் கமலா உத்தரவின் பேரில் பொறியாளர் ெசல்வி மற்றும் போலீசார், போக்குவரத்து காவலர்கள் ஆகியோர் ஒவ்வொரு கடையாக சென்று ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்தனர்.

அந்த கடைகளுக்கு முன்பு மஞ்சள் நிற குறியீடு வரைந்து இதைத் தாண்டி வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதிகளில் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

பஸ் நிலையத்தை ெதாடர்ந்து அனைத்து பகுதிகளிலும் இது போன்ற நடவடிக்கை தொடரும் என்று ஆணையாளர் கமலா தெரிவித்தார்.

Tags:    

Similar News