உள்ளூர் செய்திகள்

சாலையின் குறுக்கே செல்லும் மின் கம்பிகளால் உயிர் பலி அபாயம்

Published On 2022-06-11 08:56 GMT   |   Update On 2022-06-11 08:56 GMT
  • ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையின் குறுக்கே செல்லும் மின் கம்பிகளால் உயிர் பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • குறைந்த பட்சம் பாதுகாப்பு வலைகளாவது உடனடியாக அமைக்க வேண்டும்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகர் பகுதியில் ராமேசுவரம் நெடுஞ்சாலையில் பல இடங்களிலும், போக்கு வரத்து மிகுந்த சாலைகளை கடந்தும் 58 இடங்களில் ஆபத்தான உயரழுத்த மின் கம்பிகள் செல்கின்றன.உயிர் பலி ஏற்படும் முன் அகற்ற மின்வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு ராமநாத புரம் டி.எஸ்.பி., ராஜா கடிதம் அனுப்பி உள்ளார். அவர் கூறியதாவது:-

ராமநாதபுரம் நகர் பகுதியில் பல இடங்களில் மின் கம்பிகள் தெருக்களில் தொட்டு விடும் உயரத்தில் தாழ்வாக செல்கின்றன. இவற்றை சீரமைக்க மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தாலும் மின் வாரியம் கண்டு கொள்வதில்லை.

சிறு தெருக்கள் மட்டு மின்றி அச்சுந்தன் வயல் அருகே தொடங்கி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ராமேசுவரம் நெடுஞ்சாலையை கடந்து ஆபத்தான உயரழுத்த மின் கம்பிகள் செல்கின்றன.

பாரதிநகர் பெட்ரோல் பங்க், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல இடங்களில் டிரான்ஸ்பார்மரில் இருந்து இது போன்ற அதிக மின் அழுத்த கம்பிகள் ரோட்டின் குறுக்காக செல்கின்றன. இந்த கம்பிகள் அறுந்து விழுந்தால் ஆட்கள் கருகி பலியாவார்கள்.

வழக்கமாக இதுபோன்ற மின் கம்பிகளுக்கு அமைக்கப்படும் பாதுகாப்பு வலைகள் கூட ராமநாதபுரத்தில் எந்த இடத்திலும் அமைக்க வில்லை. எனவே குறைந்த பட்சம் பாதுகாப்பு வலைகளாவது உடனடியாக அமைக்க வேண்டும். அல்லது மின் கம்பிகளை மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது என்றார்.

இதுகுறித்து மின்வாரிய தரப்பில் ராமநாதபுரம் கோட்ட செயற்பொறியாளர் முத்துமணியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இவற்றை சீர மைக்கும் பணிகள் நடைபெறும் என்றார்.

Tags:    

Similar News