உள்ளூர் செய்திகள்

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்த கோரிக்கை

Published On 2022-10-06 07:51 GMT   |   Update On 2022-10-06 07:51 GMT
  • கீழக்கரை நகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • இங்குள்ள 21 வார்டுகளில் தீர்க்கப்படாத பல்வேறு குறைகள் உள்ளது.

கீழக்கரை

கீழக்கரை நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் பாசித் இலியாஸ் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இங்குள்ள 21 வார்டுகளில் தீர்க்கப்படாத பல்வேறு குறைகள் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் கொடுத்த வாக்குறுதி ஒன்று கூட நிறைவேறவில்லை. கீழக்கரை நகராட்சியில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு வார்டுகளில் நீடித்து வரும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து மக்கள் நேரடியாக மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

இதுவரையில் வாக்களித்த மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்க மக்கள் பிரதிநிதிகள் முன்வரவில்லை. கீழக்கரை நகராட்சி பகுதிகளில் நடக்கக்கூடிய திட்ட பணிகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஆகவே எம்.பி., எம்.எல்.ஏ., கலெக்டர் ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் அனைவரையும் அழைத்து ஊராட்சிகளில் நடக்கக்கூடிய கிராமசபை கூட்டம் போல் கீழக்கரை நகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News