உள்ளூர் செய்திகள்

புகைப்பட கண்காட்சி-கருத்தரங்கம்

Published On 2022-07-30 09:17 GMT   |   Update On 2022-07-30 09:17 GMT
  • திருப்புல்லாணி அரசு பள்ளியில் புகைப்பட கண்காட்சி-கருத்தரங்கம் நடந்தது.
  • தலைமையாசிரியர் சண்முகநாதன் தலைமை தாங்கினார்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் கோவில்கள் அறிவோம் என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.

தலைமையாசிரியர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். 8-ம் வகுப்பு மாணவர் முகம்மது சகாபுதீன் வரவேற்றார். ஓவிய ஆசிரியர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கோவில்களின் சிறப்புகளை அறிந்து மாணவர்கள் அவற்றை பாதுகாக்கவேண்டும் என மன்றச் செயலரும், தொல்லியல் ஆய்வாளருமான ராஜகுரு கருத்தரங்க அறிமுக உரையில் கேட்டுக் கொண்டார்.

கருத்தரங்கத்தில் ஆலயம் பற்றி பைரோஸ், குடைவரைக் கோவில்கள் பற்றி திவாகரன், கற்றளிகள் பற்றி ஹரிதா ஜீவா, பள்ளிப்படைக் கோவில்கள் பற்றி கனிஷ்கா, மாடக்கோவில்கள் பற்றி பூஜாஸ்ரீ, கோவில் காப்புக் காடுகள் பற்றி மகாஸ்ரீ ஆகியோர் பேசினர்.

6-ம் வகுப்பு மாணவி சுபா நன்றி கூறினார். 8-ம் வகுப்பு மாணவிகள் தீபிகாஸ்ரீ, வித்யா தொகுத்து வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை மாணவர்கள் முகம்மதுகாமில், செல்வக்கண்ணன், சாம்ராஜ், யோகேஷ்வரன், முகேஷ் பிரியன் ஆகியோர் செய்தனர்.

Tags:    

Similar News