உள்ளூர் செய்திகள்

மீன் வரத்து அதிகரிப்பு

Published On 2022-06-19 07:54 GMT   |   Update On 2022-06-19 07:54 GMT
  • தொண்டியில் மீன் வரத்து அதிகரித்துள்ளது.
  • மீன்கள் ஏலம் விடப்பட்டு தேவகோட்டை, காரைக்குடி, காளையார்கோயில், சிவகங்கை பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து அதிகமானது. கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15 வரை 60 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்று கரை திரும்பினர். இதில் அரிய வகை மீன்களான மூட்டான், மஞ்சள் கீலி, கண்ணாடி பாறை ஆகிய மீன்கள் வலையில் சிக்கின.

இது தவிர கொடுவா, பாறை, ஓரா, நகரை, செங்கனி, விலா மீன், தாழஞ்சுரா, திருக்கை, முரல், ஊடகம் மற்றும் ஆழ்கடலில் பிடிபடும் இறால், நண்டு, கனவாய் போன்ற மீன்களும் சிக்கியது. இவை தொண்டி மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தது. இங்கிருந்து ஏலம் விடப்பட்டு, தேவகோட்டை, காரைக்குடி, காளையார்கோயில், சிவகங்கை பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் உள்ள அசைவப்பிரியர்களுக்கு எந்த மீன்களை வாங்கி சாப்பிடுவது என்ற நிலையில் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.

Tags:    

Similar News