உள்ளூர் செய்திகள்

மழையால் 10 ஏக்கர் நெற்பயிர் நாசம்

Published On 2023-02-04 06:05 GMT   |   Update On 2023-02-04 06:05 GMT
  • விவசாயிகள் வேதனை
  • வேளாண்மை இயக்குனர் ஆய்வு

அறந்தாங்கி,

அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய தாலுக்காக்களில் சுமார் 32 ஆயிரம் ஹெக்டருக்கும் மேற்பட்ட விளை நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதமானது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.இதற்கிடையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை பார்வையிட சென்ற வேளாண்மை இயக்குநர் (சென்னை) அண்ணாத்துரை, அவ்வழியாக உள்ள ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய பகுதிகளில் மழையால் சாய்ந்த நெற்பயிர்கள் குறித்து பார்வையிட்டார். மேலும் அப்பகுதி விவசாயிகளிடம் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அப்போது விவசாயிகள் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு நகைக்கடன் விவசாயக் கடன் போன்றவைகளை வாங்கி ஏக்கர் ஒன்றிற்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து அறுவடைக்கு தயாரான விவசாயம் நீரில் மூழ்கி விட்டது. எனவே மதிப்பிற்குரிய இயக்குனர் ஐயா அவர்கள் பாதிகப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகை கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி, கோட்டாட்சியர் சொர்ணராஜ், வட்டாட்சியர் வில்லியம் மோசஸ், வேளாண்மை அலுவலர் பிரவீனா உள்ளிட்ட உதவி வேளாண் அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News