உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வேடசந்தூரில் 100 கிலோ புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது

Published On 2022-06-13 08:04 GMT   |   Update On 2022-06-13 08:04 GMT
  • தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் புகையிலை இல்லாத நிலையை உருவாக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
  • வேடசந்தூர் கலைஞர் நகரில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் :

தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் புகையிலை இல்லாத நிலையை உருவாக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா வியாபாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன.

அதன் வரிசையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அறிவுரையின் பேரில் வேடசந்தூர் டி.எஸ்.பி. மகேஷ் தலைமையிலான போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

வேடசந்தூர் கலைஞர் நகரில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

போலீசார் விசாரணையில் இதனை பதுக்கி வைத்திருந்தது நிஜாமுதீன், நசுருதீன் என தெரிய வந்தது. இவர்கள் எங்கிருந்து இதனை வாங்கி வந்தார்கள்? யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்ய வைத்திருந்தார்கள். இதில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News