உள்ளூர் செய்திகள்

சென்னையில் 454 ரவுடிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை

Published On 2022-07-25 08:43 GMT   |   Update On 2022-07-25 08:43 GMT
  • குற்றவாளிகள் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  • 454 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை நேரில் சென்று விசாரித்தும்.

சென்னை:

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் ரவுடி ஒழிப்பு அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்த 454 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை நேரில் சென்று விசாரித்தும், அவர்களின் நடவடிக்கை களை கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும் 10 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags:    

Similar News