உள்ளூர் செய்திகள்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு முற்றுகையிட்ட பொதுமக்கள்.

கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு வங்கி செயலாளரை கைது செய்ய கோரி பொதுமக்கள் முற்றுகை

Published On 2022-08-06 08:01 GMT   |   Update On 2022-08-06 08:01 GMT
  • வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
  • பொதுமக்களுடன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினருடன் சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இந்த வங்கியில் நகை கடன் வைத்தவர்களின் நகை தனியார் வங்கியில் மறு அடமானம் வைக்கப்பட்டதும், நகை கடன் பெற்ற பலருக்கு முழுமையான தொகை வழங்காமல் இருந்ததும் புகார் எழுந்தது. மேலும் தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை லாக்கரில் வைத்து மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்க ப்பட்டது.

இதனையடுத்து செயலா ளர் மணிவண்ணன், சஸ்பெண்டு செய்யப்ப ட்டார். பின்னர் அவர் தலை மறைவானார். முறைகேடு கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிய வரவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு முற்றுகை போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் கூட்டுறவு அலுவலர் செல்வராஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. 17 பேர்களின் பெயரில் கவரிங் நகைகளை அடமானம் வைத்து ரூ.23.72 லட்சம் கடன் வழங்கியது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே இந்த வங்கியில் நகை கடன் வைத்தவர்களின் விபர ங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.

ஓரிரு நாளில் உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்த நிலையில் இன்று காலை மீண்டும் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு வந்தனர்.

ஆனால் அங்கு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் யாரும் இல்லாததால் ஏமாற்றமடைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். பொதுமக்களுடன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினருடன் ேசர்ந்து போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் முறைகேடு செய்த செயலாளரை கைது செய்ய வேண்டும்.

அடகு வைத்த பொதுமக்களின் நகைகளை எவ்வித நிபந்தனையுமின்றி திரும்ப தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு திண்டுக்கல்லில் இருந்து வந்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதும் அவர்கள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

Tags:    

Similar News