உள்ளூர் செய்திகள்

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள்.

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

Published On 2022-07-08 04:53 GMT   |   Update On 2022-07-08 04:53 GMT
  • கிராம நிர்வாக அலுவலரை மாற்ற கோரி நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
  • பணி யிடமாறுதல் செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவார்பட்டி கிராம நிர்வாக அலுவலராக நவாஸ் என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர் சான்று வழங்க 20 நாட்கள் வரை காலம் தாழ்த்துவதாக புகார் எழுந்து வந்தது.

மேலும் பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் பெறுவதற்கு அதே அலுவலகத்தில் 4 இடைத் தரகர்களை நியமித்துள்ளதாகவும், அவர்கள் மூலமாக பணத்தை பெற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே கிராம நிர்வாக அலுவலர் அந்த சான்றிதழை வழங்க கையொப்பமிடுவ தாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

எனவே நிலக்கோட்டை தலைமையிடத்து துணை தாசில்தார் தங்கேஸ்வரியி டம் இது குறித்து புகாரளித்த னர். சிலுக்குவார்பட்டி கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக மாறுதல் செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நாங்கள் கிராமங்கள் முழுவதும் போஸ்டர் ஒட்டி பஸ் மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

மேலும் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் முற்றுகை யிட்டு பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை அளித்துச் சென்றனர். ஒரு வார காலத்தில் உரிய நடவடிக்கை எடுத்து பணி யிடமாறுதல் செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News