உள்ளூர் செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி- பொம்மிடி நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-08-18 10:02 GMT   |   Update On 2022-08-18 10:02 GMT
  • குடிபோதையில் இரு சக்கர வாகனங்களை மின்னல் வேகத்தில் இயக்குகிறார்கள்.
  • இந்த சாலையில் வாகனத்தை ஓட்டுவதற்கு பொது மக்களிடையே ஒரு அச்ச உணர்வு நிகழ்ந்து வருகிறது.

 பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து நிறைந்த சாலைகளில் பொம்மிடி நெடுஞ்சாலை முக்கியமானது.

தருமபுரியில் இருந்து கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி வரை செல்லும் நெடுஞ்சாலையில் தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால், ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயற்சிக்கும் போது விபத்துக்கள் ஏற்பட்டு தினமும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

ஆகவே இந்த சாலையில் வாகனத்தை ஓட்டுவதற்கு பொது மக்களிடையே ஒரு அச்ச உணர்வு நிகழ்ந்து வருகிறது. மேலும் குடிபோதையில் இரு சக்கர வாகனங்களை மின்னல் வேகத்தில் இயக்குகிறார்கள்.

இதனால் எதிர்வரும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை செலுத்தி விபத்துக்களை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மதிக்காமல், தலைக்கவசம் அணியாமலும், ஒரே வாகனத்தில் 3 பேர், 4 பேர் என வாகனத்தில் அதி வேகமாக குடிபோதையில் இயக்குவதால் தினமும் வாகனங்கள் மீது மோதியும், சாலையோர புளிய மரங்கள் மீது மோதியும் உயிரிழப்புக்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

எனவே வாகன போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்தியும், சாலையின் தன்மை, எச்சரிக்கை பலகைகள், வைப்பதன் மூலமும் நெடுஞ்சாலை குறுகலாக இருப்பதால் சாலை விரிவாக்கம் செய்தால் விபத்துக்களை குறைக்கலாம் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

குறிப்பாக கடந்த சில மாதங்களில் மட்டும் பொம்மிடியில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி வரை செல்லும் நெடுஞ்சாலை விபத்துக்களை அதிகளவு சந்தித்து உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருவதால் சாலை விரிவாக்கம் செய்யவும், போக்குவரத்து விதிகள் குறித்த விழ்ப்புணர்வும் ஏற்படுத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News