உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மேம்படுத்த 100 சதவீத மானியத்தில் சலுகைகள்- வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

Published On 2022-07-30 08:17 GMT   |   Update On 2022-07-30 08:17 GMT
  • தரிசாகஉள்ள தங்களதுநிலங்களை சீர்படுத்திவிவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
  • சொட்டுநீர்பாசனம் அமைக்க ஓரு விவசாயிக்கு அதிக பட்சம் 12.5ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும்.

உடன்குடி:

உடன்குடி, திருச்செந்தூர் பகுதியில்தரிசு நிலங்களை விளை நிலமாக்கும் திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100சதவீதமானியம் வழங்கப்படும் என வேளாண்மைஉதவி இயக்குநர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர், உடன்குடிவட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்தரிசு நிலங்களை விளை நிலமாக்கும்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது.

கடந்த 5 வருடங்களுக்கு மேலாக தரிசாகஉள்ள தங்களதுநிலங்களை சீர்படுத்திவிவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இத்திட்டத்தில்சொந்த நிலம் உள்ள ஒரு விவசாயிக்கு அதிக பட்சம் 5ஏக்கர் வரை மானியம்வழங்கப்படும்.

இத்திட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்தேர்வு செய்யப்பட்ட பள்ளிப்பத்து, மூலக்கரை, வீரமாணிக்கம், பிச்சிவிளை, வெங்கட்ராமானுஜபுரம், சிறுநாடார்குடியிருப்பு, மாதவன்குறிச்சி, சீர்காட்சி மற்றும் மணப்பாடு கிராம பஞ்சாயத்தில்உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதர கிராம விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். மேலும் தரிசுகளை சீர்படுத்தி சாகுபடி செய்யப்படும் பயிருக்கு ஏற்பபிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100சத மானியம், இதர விவசாயிகளுக்கு 75சதவீதம் மானியமும் மற்றும் துணைநிலை நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் புதியதாக ஆழ்துளை கிணறு, மின்மோட்டார், மற்றும் நீர்சேமிக்கும் தொட்டி அமைக்க மானியமும் விதிமுறைக்குஏற்ப வழங்கப்படுகிறது.

சொட்டுநீர்பாசனம் அமைக்க ஓரு விவசாயிக்கு அதிக பட்சம் 12.5ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் ஆதார்கார்டுநகல், ஸ்மார்ட்கார்டு நகல், வங்கி கணக்கு புத்தகநகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும்தரிசு அடங்கல், கணிணி பட்டாஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி பயன்பெறவும்என அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News