உள்ளூர் செய்திகள்

தனியார் அரிசி ஆலையில் ஆய்வு நடத்திய அதிகாரிகள்.

வாழப்பாடி அருகே தனியார் அரிசி ஆலையில் அதிகாரிகள் திடீர் சோதனை

Published On 2022-09-28 09:41 GMT   |   Update On 2022-09-28 09:41 GMT
  • இந்த ஆலையில், ரேசன் அரிசியை அரைத்து மாவாக்கி வீற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
  • அரசு வழங்கும் ரேஷன் அரிசியை வாங்கி அரைத்து பேக்கிங் செய்து கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரிசி ஆலை நிர்வாகத்திற்கு ஆய்வு குழுவினர் அறிவுரை வழங்கினர்.

வாழப்பாடி:

வாழப்பாடி அருகே ‌மேட்டுப்பட்டி, சுங்கச்சாவடி பகுதியில் தனியார் அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில், ரேசன் அரிசியை அரைத்து மாவாக்கி வீற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து வாழப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் தமிழரசி தலைமையில், குடிமைப் பொருள்

வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை ஆய்வாளர் ரேணுகா தேவி, எஸ்.ஐ பெரியசாமி, தனி வருவாய் ஆய்வாளர் மற்றும் போலீஸார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது அங்கு அரிசியை அரைத்து பாக்கெட் செய்வது தெரியவந்தது.

அரசு வழங்கும் ரேஷன் அரிசியை வாங்கி அரைத்து பேக்கிங் செய்து கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரிசி ஆலை நிர்வாகத்திற்கு ஆய்வு குழுவினர் அறிவுரை வழங்கினர்.

Tags:    

Similar News