உள்ளூர் செய்திகள்

கோவையில் தொழிலாளியை தாக்கி பணத்தை பறித்த மர்மநபர்கள்

Published On 2022-07-11 09:52 GMT   |   Update On 2022-07-11 09:52 GMT
  • கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீ யரிங் நிறுவனத்தில் தொழி லாளியாக வேலை பார்த்து வருகிறார்.
  • ஊருக்கு செல்வதற்காக சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்கு சென்றார். பஸ் வருவதற்கு காலதாமதம் ஆனதால் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார்.

கோவை:

கடலூர் அருகே உள்ள காட்டுமன்னார் கோவிலை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). இவர் கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீ யரிங் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக புறப்பட்டார்.

இதனையடுத்து அவர் தனது கம்பெனியில் இருந்து சம்பள பணம் ரூ. 1 லட்சத்தை பெற்றார். பின்னர் ஊருக்கு செல்வதற்காக சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்கு சென்றார். பஸ் வருவதற்கு காலதாமதம் ஆனதால் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். அப்போது அங்கு மது குடித்துக்கொண்டு இருந்த 2 பேர் ராஜசேகரிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். அவருக்கு உதவி செய்வது போல நடித்து பேசினர்.

பின்னர் அவரை திருச்சி ரோட்டில் உள்ள பள்ளி அருகே மறைவான இடத்துக்கு அைழத்து சென்றனர். அங்கு வைத்து 2 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் ராஜசேகரின் தலையில் தாக்கினர். இதில் நிலைதடுமாறிய அவர் மயங்கினார். பின்னர் 2 பேரும் அவர் வைத்து இருந்த ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மயங்கிய நிலையில் கிடந்த ராஜசேகரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறனர். இந்த தகவல் கிடைத்ததும் சிங்காநல்லூர் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இது குறித்து சிங்காநல்லூர் வழக்குப்பதிவு செய்து உதவி செய்வது போல நடித்து தொழிலாளியை தாக்கிய மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News