உள்ளூர் செய்திகள்

தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட காட்சி.

மதுரையில் அதிகரிக்கும் தரமற்ற உணவுகள் விற்பனை

Published On 2022-08-24 08:27 GMT   |   Update On 2022-08-24 08:27 GMT
  • ஓட்டல்களில் 25 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் மதுரையில் அதிகரிக்கும் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.
  • சென்னை, கோவை உள்ளி–ட்ட பெருநகரங்களில் அடிக்கடி இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மதுரை

இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப வீட்டு உணவுகளை தவிர்த்து ஓட்டலில் சாப்பிடும் பழக்கம் மக்களிடம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஓட்டல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கொரோனா ஊரடங்கிற்கு பின் புற்றீசல்கள் ேபால் ஓட்டல்கள் வீதிக்கு வீதி முளைத்துள்ளன. மேலும் சைனீஸ், தாய்லாந்து உள்பட வெளிநாட்டு உணவு வகைகளும் தற்போது பிரபலமாகி வருகிறது. மதுரையிலும் பெரியார் பஸ் நிலையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய அளவில் ஆயிரக்கணக்கான ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன.

இதை தவிர்த்து சாலையோர ைகயேந்திபவன் உணவகமும் அதிகளவில் உள்ளது. மேலும் வடை, பானிபூரி போன்ற துரித உணவு கடைகளும் உள்ளன. கடைகள் அதிகரித்து வரும் நிலையில் தரமான உணவு பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

குறிப்பாக அசைவ ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சிகள், 2, 3 நாட்கள் பயன்படுத்தும் சால்னா போன்றவை மக்களுக்கு விநியோகிக்கப்டுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புரோட்டாவிற்கு தரமற்ற எண்ணையை பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து தெப்ப–க்குளம் பகுதியில் உள்ள அசைவ ஓட்டல்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராமையா பாண்டியன் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் 5 கிலோ கெட்டுப்போன பழங்கள், 25 கிலோ கெட்டுப்ேபான இறைச்சி, 23 கிலோ பழைய புரோட்டா, தரமற்ற 10 லிட்டர் குழம்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன.

தெப்பக்குளம் மட்டுமின்றி நகரில் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற அசைவ, சைவ ஓட்டல்களில் தரமற்ற உணவுகள் விற்க்கப்படுகிறது. சாலையோரம் மற்றும் தெருக்களில் குப்பைகளும், கழிவுநீரும் தேங்கி உள்ள பகுதியில் கடை அமைத்து உணவு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

உணவு பொருட்களின் விலை நாளுக்குநாள் உயர்ந்த வரும் நிலையில் அதற்கேற்ப வகையில் தரமான உணவு பொருட்கள் வழங்கவேண்டும். ஆனால் 75 சதவீத ஓட்டல்களில் ஏதேனும் வகையில் தரமற்ற உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. மதுரையில் பல மாதங்களுக்கு பின் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.

இந்த சோதனையை மாதந்தோறும் நடத்தினால் பொதுமக்களுக்கு தரமான உணவுகள் கிடைக்க வழிவகை ஏற்படும். சென்னை, கோவை உள்ளி–ட்ட பெருநகரங்களில் அடிக்கடி இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News