உள்ளூர் செய்திகள்

காலை 7 மணி வரை பால் வராததால் மதுரை ஆவின் நிறுவனம் முன்பு ஏஜெண்டுகள் காத்திருந்தனர்.

பால் விநியோகம் தாமதமாக தொடங்கியதால் பொதுமக்கள் அவதி

Published On 2022-10-17 08:16 GMT   |   Update On 2022-10-17 08:16 GMT
  • பால் விநியோகம் தாமதமாக தொடங்கியதால் பொதுமக்கள் அவதிகுள்ளாகினர்.
  • இதன் காரணமாக அந்த நிறுவனம் முன்பு ஏராளமான முகவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

மதுரை

மதுரை மாவட்டத்திற்கு ஆவின் நிறுவனம் மூலம் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 40 வழித்தடங்களில் 390 டெப்போக்கள் மூலம் பால் பாக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மாவட்டத்திற்கு அதிகாலை 5 மணிக்கு முன்பே ஆவின் பால் சப்ளை செய்யப்படுவது வழக்கம். இன்று காலை 7 மணி ஆகியும் மதுரை கே.கே.நகரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் பால் வரத்து இல்லை. இதன் காரணமாக அந்த நிறுவனம் முன்பு ஏராளமான முகவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

மேலும் ஆவின் பூத் முன்பு பொதுமக்கள் காத்திருந்து, பாலை வாங்கிச் செல்ல வேண்டியதிருந்தது.மதுரை மாவட்டத்தில் பால்வரத்து கால தாமதம் தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மதுரை மாவட்டத்திற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் தேவை. தற்போது 1.50 லட்சம் லிட்டர் என்ற அளவில் மட்டுமே கொள்முதல் செய்ய முடிகிறது. பால் உற்பத்தியாளருக்கு தனியார் நிறுவனங்கள், லிட்டருக்கு 35 ரூபாய் வரை பணம் கொடுக்கிறது. ஆவின் நிறுவனம் சார்பில் ரூ.30 வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள், தனியார் நிறுவனங்களை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர். இருந்த போதிலும் மதுரை மாவட்டத்தில் பால் கொள்முதலை அதிகரித்து விநியோகத்தை சரி செய்வது தொடர்பாக உற்பத்தியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்றனர்.

Tags:    

Similar News