உள்ளூர் செய்திகள்

 ஓய்வூதியர் சங்க மாநாடு

சத்துணவு - அங்கன்வாடி உதவியாளருக்கு ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

Published On 2022-06-30 09:00 GMT   |   Update On 2022-06-30 09:00 GMT
  • சத்துணவு - அங்கன்வாடி உதவியாளருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் மாநாடு நடந்தது.

மதுரை

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 4-ஆம் வட்ட கிளை மாநாடு உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.

வட்ட கிளை தலைவர் ஆடிட்டர் பாண்டி தலைமை தாங்கினார். பழனி, அக்கினிபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டக்கிளை துணைத் தலைவர் அமிர்தம் வரவேற்றார்.

மாவட்ட பொருளாளர் ஜெயராமன், வட்ட கிளை செயலாளர் மகேஸ்வரன், வட்ட கிளை பொருளாளர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் பாலமுருகன், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரஞ்சனி சுதந்தரம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் முத்துராணி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அய்யங்காளை பெரியகருப்பன், ராசையா, ரங்கமலை மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சத்துணவு - அங்கன்வாடி வருவாய்க் கிராம உதவியாளருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம்ரூ.7,850 வழங்கவும், 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவும், தமிழக அரசு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றினர்.

முடிவில் மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News