உள்ளூர் செய்திகள்

சோழவந்தான் கோவில்களில் தர்ப்பணம் செய்து வழிபட்ட பக்தர்கள்

Published On 2022-09-26 07:26 GMT   |   Update On 2022-09-26 07:26 GMT
  • சோழவந்தான் அருகே திருவேடகம், அணைப்பட்டி ஆகிய வைகை ஆறு உள்ள பகுதியில் தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
  • முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக இந்த வழிபாடு நடப்பது வழக்கம்.

சோழவந்தான்

முன்னோர்களுக்கு வழிபாடு செய்யும் முக்கிய புனித தலங்களாக ராமேசுவரம், திருப்புவனம், திருவேடகம் உள்ளது. புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக பக்தர்கள் வழிபாடு செய்வார்கள். நேற்று மகாளய அமாவாசையையொட்டி திருவேடகம், சோழவந்தான், அணைப்பட்டி ஆகிய வைகை ஆறு உள்ள பகுதியில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். அதன் பிறகு இந்த பகுதியில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திருவேடகம் சாய்பாபா கோவில் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News